மார்கழி மாத ராசி பலன் 2025 - சிம்ம ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு நிலம் இடம் வீடு போன்றவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார முன்னேற்றங்களை தற்போது அவர் கொடுக்க தயாராக இருக்கிறார்...
அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே மார்கழி மாதத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாமா?
குரு பகவான் வக்கிரநிலையை அடைந்து கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் பிரவேசித்து விட்டார்.. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லாபஸ்தான குரு பகவானின் சஞ்சாரம் தற்பொழுது உங்கள் ராசியின் மீது விழுந்திருக்கிறது.... போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று யார் எதைப் பற்றி என்ன சொன்னாலும் லாபகுரு உங்களுக்கு நன்மையை வாரி வழங்க காத்திருக்கிறார்...
குறிப்பாக ஐந்தாம் இடத்தில் இருக்க கூடிய செவ்வாய் பகவான் உங்களுக்கு நிலம், இடம், வீடு போன்றவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார முன்னேற்றங்களை.... தற்போது அவர் கொடுக்க தயாராக இருக்கிறார்... வீடு கட்டி இருக்கிறீர்கள் வாடகைக்கு விட வேண்டும் என்றால் இதோ இதுதான் சரியான நேரம் மார்கழி முடிந்த பின்பாக அது கைகூடிவரும்... ஏழாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுபகவான் எந்த மாதிரியான வியாபாரங்களை விரிவுபடுத்தலாம் என்று சிந்தித்து உங்களை செயலாக்கத்திற்கு உட்படுத்துவார்.... ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்க்க வேண்டிய கூட வரலாம்... வாழ்க்கை துணை உடன் சிறு சிறு சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வந்து செல்வது சகஜம் தானே... ஏழில் இருக்கக்கூடிய ராகுபகவான் கருத்து முரண்பாடுகளை வாழ்க்கைத் துணையுடன் கொடுத்துக் கொண்டே இருப்பார்... அதை தவிர்ப்பதற்கு நீங்கள் மௌன விரதம் கூட இருக்கலாம்.... தொழில் கவனம் செலுத்துங்கள்.... பிள்ளைகளால் ஆதாயமும் பெருமையும் உண்டு.... வாழ்க்கை துணையின் மூலம் சில பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்...
சனி பகவானின் அஷ்டமத்து சஞ்சாரம் சில சங்கடங்களை கொடுத்தாலும் கூட ஆறாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் மறைவதால் கெட்டவன் கெட்டுடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அடிப்படையில்..... உங்களுடைய லக்னத்திற்கு ஆறாம் அதிபதி எட்டில் மறைகிறார் என்பது நன்மையே.... அதற்கென்று சனி பகவான் கெட்டவன் அல்ல அவர்தான் நீதிமான்... அவரைப்போல ஒரு அற்புதமான கிரகங்கள் நம்மால் பார்க்க முடியாது... நல்லது கெட்டது எது என்பதை ஜாதகருக்கு உணர்த்த பொறுமையாக செயல்படுவார்.... ஒரு மனிதன் பொறுமையாக இருந்தாலே போதும் அவனுக்கு வரக்கூடிய காலங்கள் நன்மையா கெட்டவையா என்பது உணர்த்தும் தன்மையை புரிந்துவிடும்...
வேகமாக போய் திருமணம் செய்து கொள்வது பிறகு பார்த்த வரன் சரியில்லை என்ன செய்வது என்று புலம்புவது... ஆனால் அதுவே சனி பகவானாக இருந்தால் ஏழாம் இடத்து சஞ்சாரத்தை கொடுக்கவே மாட்டார் நீண்ட நாட்களுக்கு திருமணமாகாமல் பிறகு நல்ல வரங்களை கொண்டு வந்து சேர்ப்பார்.... எனவே சனிபகவான் கொடுக்க நினைத்து விட்டார் யாராலும் தடுக்க முடியாது.... சூரியனுடைய சஞ்சாரம் மிக அற்புதமாக தனுசு ராசியில் பதிவாகிறது... ராசி அதிபதி ஐந்தில் இருப்பது உங்களிடத்தில் ஆலோசனை பெற்று எந்த காரியத்தையும் மற்றவர்கள் செய்தால் மிகப் பிரமாதமாக வரும்.... பூர்விகத்தோடு தொடர்பு ஏற்படும்.... வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு பிரிந்திருந்தவர்கள் கூட ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது.... சனிக்கிழமை தோறும் சனி பகவானை சென்று சந்தித்து வாருங்கள் அவர் அஷ்டமத்தில் மறைவதால் நம்மை அறியாமல் சில சங்கடங்களான முடிவுகளை எடுக்க நேரிடலாம்... இந்த மாதிரியான காலகட்டத்தில் ஆஞ்சநேயர் வழிபாடும் சனி பகவானின் வழிபாடும் உங்களை நல்ல பாதைக்கு இட்டுச் செல்லும்.... வாழ்த்துக்கள் வணக்கம்





















