Cyclone Michaung LIVE: சென்னையில் நாளை முழு அளவில் புறநகர் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை
Cyclone Michaung LIVE Updates தமிழகத்தில் கனமழைக்கு காரணமாக டிசம்பர் 1 முதல், 8 உயிரிழப்பு ஏற்பட்டது என வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது
LIVE
Background
Cyclone Michaung LIVE Updates:
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள், மிகவும் மோசமான வானிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.
6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைப்பு. புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, இதுவரை 20 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம்.
மீனம்பாக்கத்தில் 82 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசி வருவதால் காலை 10 மணி முதல் 2 மணி நேரத்திற்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால் விமான சேவை ரத்து செய்யப்படும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று சென்னைக்கு அபுதாபி 2 விமானங்கள், துபாய் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பை மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள், ஆகிய 20 விமானங்கள் இன்று இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, உட்பட 14 புறப்பாடு விமானங்கள், லண்டன், கோலாலம்பூர், சார்ஜா, துபாய், மும்பை, டெல்லி உள்ளிட்ட 12 வருகை விமானங்கள், மொத்தம் 26 விமானங்கள் இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.
இதை அடுத்து விமான பயணிகள் அனைவரும் அந்தந்த விமானம் நிறுவனங்களின், இணையதளங்களில் தொடர்பு கொண்டு விமானங்களின் புறப்பாடு வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொண்டு, அதன்பின்பு விமான நிலையத்திற்கு வந்தால் போதும். மேலும் அவசியமான பயணம் என்றால் மட்டும், இன்று விமானப்பயணம் மேற்கொள்ளலாம். இல்லை என்றால், இன்று விமான பயணத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விமான நிலையத்தில் வேகமாக காற்று வீசி வருவதாலும் விமான ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாலும் 68 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளையே புறநகர் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை - தெற்கு ரயில்வே
சென்னையில் புறநகர் ரயில்சேவையை நாளையே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Cyclone Michaung LIVE: வலுவிழக்கும்!
ஆந்திரா கடற்கரைக்கு அருகே பாபட்லா பகுதியில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல். அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
கரையை கடந்தது மிக்ஜாம் புயல்
ஆந்திரா கடற்கரைக்கு அருகே பாபட்லா பகுதியில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல். மதியம் 12.30 மணியிலிருந்து 2.30 மணிவரை தீவிர புயலாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 4 மணி நேரத்தில் கரையை கடக்கிறது மிக்ஜாம்!
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையை கடக்க உள்ளது.
இன்னும் 4 மணி நேரத்தில் கரையை கடக்கிறது மிக்ஜாம்!
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையை கடக்க உள்ளது.