Cyclone Mandous: கடலில் தத்தளித்த 3 பேர்: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை..
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுருத்தியுள்ளனர்.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுருத்தியுள்ளனர்.
கடலூரில் இருந்து 30 NM (நாட்டிக்கல் மைல்) தொலைவில் மண்டூஸ் சூறாவளியின் பாதையில் கடலில் சிக்கித் தவித்த 3 நபர்களை கடலோர காவல்படை ALH மீட்டுள்ளது. சூறாவளியின் பரவலான சீற்றம் இருந்தபோதிலும், கடலோர காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் நிலைமையை தைரியமாக சமாளித்தது மற்றும் 3 நபர்களை எண்ணெய் கிணற்றில் (oil rig) இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
In a valiant act, @IndiaCoastGuard Advance Light Helicopter #ALH rescued 03 stranded persons from Floating Production Unit (FPU) Tahara,30 NM off #Cuddalore. Despite the prevalent fury of cyclone, #ICG Helicopter braved the situation & evacuated 03 personnel safely from oil rig. pic.twitter.com/eACygUaID6
— Indian Coast Guard (@IndiaCoastGuard) December 8, 2022
மாண்டூஸ் புயல் நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதியால் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1. கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டுள்ளது
2. உள்ளூர் ஊடகம், தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
3. மீனவ மக்கள் மற்றும் கடலோர மக்களுக்கு அறிவுரை வழங்க மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
4. கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வழங்கி மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்புகின்றன.
5. அனைத்து துறைமுகங்களும் நங்கூரத்தில் இருக்கும் கப்பல்களை எச்சரிக்கை மற்றும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
6. கரையோரப் பாதுகாப்புக் குழுவானது அனைத்து உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் கோரப்பட்டுள்ளது
7. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஆயில் ரிக்குகளும், கடலோர நிறுவல்களும் கோரப்பட்டுள்ளன.