Tasmac Guidelines | ”மாஸ்க் போடுங்க.. போடலேன்னா..” : டாஸ்மாக் நெறிமுறைகள் வெளியீடு!
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கபட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதேபோல் தலைநகர் சென்னையில் கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை 13 சதவிகிதம் வரை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சென்னையில் இதுவரை பதிவாகாத அளவில் ஒரே நாளில் 6,484 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 3,043 பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 11 January 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 11, 2022
• TN - 15,379
• Total Cases - 28,29,655
• Today's Discharged - 3,043
• Today's Deaths - 20
• Today's Tests - 1,35,672
• Chennai - 6,484#TNCoronaUpdates #COVID19India
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கபட்டது. இந்தநிலையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் கொரோனா நோய் தொற்று நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
No facemask, no liquor: TASMAC pic.twitter.com/VrYhirUKzO
— Dennis S. Jesudasan (@DennisJesudasan) January 11, 2022
1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. 2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது. 4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.
மேற்காணும் அறிவுரைகளை தவிர பல்வேறு கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஏற்கனவே இவ்வலுவலக சுற்றறிக்கைகள் வாயிலாக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளருக்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைபிடித்து சமூக இடைவெளியை பின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும் கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில வாணிப கலக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்