Covid 19 3rd Wave: “கொரோனா மூன்றாவது அலை ஆரம்பம்; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கொரோனாவின் மூன்றாவது அலை தமிழ்நாட்டில் ஆரம்பித்துவிட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சற்று ஓய்ந்திருந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்க மக்கள் அனைவரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு அருகே 17ஆவது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது. எனவே தொடர்ந்து மக்களின் ஒத்துழைப்பு தேவை. முகக்கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
மாந்தோப்பு ஆண்கள் மற்றும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்
60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு வரும் 10ஆம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி 9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாள்களில் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்.
அனைவரும் மருத்துவமனைக்கு வந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்படும். எல்லோருக்கு ஏ சிம்டம் என்பதால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம். பொதுமக்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாநகராட்சி சார்பாக 25384520, 46122300 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Covid 19 Cases in India:ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்க.. 1500 ஐ கடந்த ஒமிக்ரான்.. தமிழக நிலவரம் என்ன?
Ganguly Discharged: கொரோனாவை பந்தாடி மீண்டு வந்தார் கங்குலி... அவருக்கு ஒன்னும் இல்லையாம் பங்காளி!