Ganguly Discharged: கொரோனாவை பந்தாடி மீண்டு வந்தார் கங்குலி... அவருக்கு ஒன்னும் இல்லையாம் பங்காளி!
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த மாதம் 28 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கங்குலிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உயிர்கொல்லி வகையான ஒமிக்ரான் தொற்று இல்லை என்றும், கோவிட்-19 இன் டெல்டா பிளஸ் மாறுபாடு என்றும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கங்குலிக்கு உட்லேண்ட்ஸ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளதா என மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், சவுரவ் கங்குலி கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். மேலும், சில நாட்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2021 தொடக்கத்தில் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுபட்டபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
BCCI President @Sourav Ganguly admitted to Woodland Hospital in Kolkata, West Bengal pic.twitter.com/zTsXBaIz4f
— Rahul Deo Kumar (@RahulDeoKumar) January 2, 2021
அப்போது அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார். தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு, ஜனவரி 28ஆம் தேதி மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு இரண்டாவது முறை ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது இரண்டு தமனிகளில் இரண்டு ஸ்டென்ட்கள் வைக்கப்பட்டன.
Congratulations to the under 19 team for winning the Asia Cup ..No cricket for 15 months since2020 for covid and to win is a commendable effort ..well dne to plyrs ,coaches , new slctrs who hd vry ltle time to pick the best players ..NCA deserves a lot of credit @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) December 31, 2021
எப்பொழுது ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கங்குலி, கடந்த டிசம்பர் 31 ம் தேதி அண்டர் 19 ஆசியா கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோல், கடந்த 30 ம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Great victory for Team India ..not surprised by the result at all...will be a hard team to beat this series..South africa will have to play out of their skins to do that ..enjoy the new year @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 30, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்