Covid 19 Cases in India:ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்க.. 1500 ஐ கடந்த ஒமிக்ரான்.. தமிழக நிலவரம் என்ன?
தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 117 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெற்று வந்த 9,249 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 284 பேர் உயிரிழந்துள்ளனர். 1,22,801 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தற்போதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம்
தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 117 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
COVID19 | India reports 27,553 fresh infections, 284 deaths and 9,249 discharges in the last 24 hours; Active caseload stands at 1,22,801
— ANI (@ANI) January 2, 2022
Omicron case tally rises to 1,525 pic.twitter.com/KH605GBwDA
இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கான வேலைகளை மத்திய மாநில அரசுகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் ( கோவாக்சின், கோவிஷுல்டு) செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 8.33 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 145 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது புதிதாக ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை 1500 க்கும் மேல் தொற்று பரவியிருக்கிறது.
முன்னதாக, கிறிஸ்துமஸ்க்கு முன்தினம் பேசிய மோடி , “ 15 -18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 ஆம் தேதி தடுப்பூசி போடப்படும் என்றும் அதேப் போல முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதை கடந்த இணைநோய் உள்ளவர்களுக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றார். அதன் படி நாடு முழுவதும் 15-18 வயதுகுட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்