மேலும் அறிய
Advertisement
ஏப்ரல் 11 வரை 23% கொரோனா தடுப்பூசி வீண்: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்
ஏப்ரல் 11 வரை 23 சதவீதம் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிக்கு பற்றாக்குறை என்பதே இன்றைய முக்கிய விவாதப் பொருளாக எழுந்துள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதி வரை நாடு முழுவதும் 23% கரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தலைவிரித்தாடுகிறது. அன்றாட பாதிப்பு 2.5 லட்சத்துக்கும் குறையாமல் இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1000க்கும் மேல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. வரும் மே 3ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 11ம் தேதி வரை நாடு முழுவதும் 23% கரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கரோனா தடுப்பூசித் திட்டம் அமலுக்கு வந்தது. தற்போது இரண்டாவது கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதன்படி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட 10.34 கோடி கரோனா தடுப்பூசிகளில் 44.78 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. இதில், இன்னும் பேரதிர்ச்சித் தரும் விஷயம் தடுப்பூசிகளை வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஹரியாணா, பஞ்சாப், மணிப்பூர், தெலங்கானா மாநிலங்கள் உள்ளன.
கேரளா, மேற்குவங்கம், இமாச்சலப்பிரதேசம், மிசோரம், கோவா மாநிலங்களிலும் டாமன், டையு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முன்னதாக நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இனி மாநில அரசுகளே மருந்து நிறுவனங்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி எப்படி வீணாகிறது?
தடுப்பூசி மருந்து அடங்கிய ஒரு குப்பியைத் திறந்தவுடன் அதை 10 பேருக்கு செலுத்திவிட வேண்டும். 4 மணி நேரத்துக்குள் தடுப்பூசி குப்பியை முழுமையாகப் பயன்படுத்திவிட வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒருவேளை குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தக் குப்பியை முழுமையாகப் பயன்படுத்த இயலவில்லை என்றால் அது பயனற்றதாக ஆகிவிடுகிறது. இவ்வாறாக தடுப்பூசி வீணாவதைத் தடுக்கவே அரசாங்கம் கோவின் போன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துவிட்டு தடுப்பூசிக்கு வர வலியுறுத்துகிறது. அவ்வாறாக செல்லும்போது அன்றைய தினம் எத்தனை தடுப்பூசி மருந்துக்குப்பிகள் தேவைப்படும் என்பதை ஏற்கெனவே நிர்ணயித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு உள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்த அரசுகம், உரிய முறையில் பெற்றுக் கொள்ள மக்களும் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion