மேலும் அறிய

கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்கவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரியுள்ளார்

"கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது. குறிப்பாக  நமது அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தனியார்  ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தில்லி, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை ரூ.500க்கு செய்யப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் அரசு நிறுவனங்களில் கொரோனா சோதனைக்கு  ரூ.350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவாக ஆந்திரத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.475 ஆக உள்ளது. ஆனால், மருத்துவக் கட்டமைப்பில் முன்னேறிய தமிழகத்தில் மட்டும் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகமாகவுள்ளது.

கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்கவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு முகாம்கள் மூலம் கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அரசு  ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது 900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.600 ஆக உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது ஆர்.டி.- பி.சி.ஆர் கொரோனா ஆய்வுக்கான  அதிகபட்சக் கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சில ஆய்வகங்களில் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக் கருவிகள் தாராளமாக கிடைக்கத் தொடங்கிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா சோதனைக் கட்டணம் படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களாகவே ரூ.500 தான் மற்ற மாநிலங்களில் வசூலிக்கப் பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கடந்த மே மாதம் முதல் இதே கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறது. அதன்பின் மற்ற மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த போதிலும் தமிழகம் குறைக்கவில்லை என்றார்.

கொரோனா சோதனை கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்கவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் இப்போது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இத்தகைய சூழலில் அதிக எண்ணிக்கையில் கொரோனா சோதனைகளை செய்வதன் மூலம் தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று 1.35 லட்சம் சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவு. கொரோனா சோதனைகளை ஒரு நாளைக்கு 3 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தால் தான் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு இல்லாமல் சோதனைகளை அதிகரிக்க முடியாது. தமிழகத்தில் இன்றைய நிலையில் மொத்தம் 321 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 69 மட்டுமே அரசு ஆய்வகங்கள். மீதமுள்ள 252 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. அவற்றில் கட்டணம் குறைக்கப்பட்டால் மக்கள் தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்வார்கள். அதற்கு வசதியாக தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தை குறைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Trisha Net Worth: 40 வயதில் தளபதியுடன் ஐட்டம் டான்ஸ்; அஜித்துக்கு ஜோடி! பல கோடி சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Trisha Net Worth: 40 வயதில் தளபதியுடன் ஐட்டம் டான்ஸ்; அஜித்துக்கு ஜோடி! பல கோடி சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Embed widget