'வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமாதிரியான சில கேள்விகளுக்கு பிரபல ஆங்கில நாளிதழ் பதிலளித்துள்ளது. அவை,வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!
தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே செல்லும் போது இபாஸ் எடுக்க வேண்டுமா?


மாவட்டத்துக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இ ரிஜிஸ்ட்ரேஷன் தேவை இல்லை


நான் எனது வீட்டை காலி செய்துவிட்டு மைசூருவுக்கு செல்ல வேண்டும். இந்த ஊரடங்கில் சாத்தியமா?  


ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 


அவசர வழக்கை விசாரணைக்காக வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியுமா?
மருத்துவ அவசரம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இ ரிஜிஸ்டர் இல்லாமல் பயணிக்க அரசு அனுமதி அளிக்கிறது. நீங்கள் அவசர வழக்கு தொடர்பான கோப்புகளை காண்பித்து அனுமதி வாங்கலாம்


நாங்கள் ஊரடங்குக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து பெங்களூரு வந்துவிட்டோம். ஆனால் எங்கள் வீட்டு பொருட்கள் சென்னையில் உள்ளது. நாங்கள் சரக்கு வாகனம் மூலம் பொருட்களை  கொண்டுவர முடியுமா?


வீட்டை காலிசெய்து கொண்டு வரும் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் தயார் எனில் பொருட்களை இடம் மாற்றலாம். ஏனென்றால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 


கட்டிட வேலையை என்னால் தொடர முடியுமா?
ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிட வேலைகளை தொடரலாம். ஆனால் பணியாளர்கள் அங்கேயே தங்கி இருந்தால் மட்டுமே முடியும். வெளியில் இருந்து வந்து செல்ல அனுமதியில்லை.வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!


நான் என்னுடைய நீரிழிவு மற்றும் ரத்த  அழுத்தத்திற்கான மாத்திரிகளை வாங்குவதற்காக அடையாரில் இருந்து ஆதம்பாக்கம் செல்ல வேண்டும்.அனுமதி உண்டா?


இதுமாதிரியான தேவையற்ற பயணங்களுக்கு அரசு அனுமதி அளிப்பதில்லை. உங்கள் மாத்திரிகளை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வாங்கலாம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் கிடைக்கும் என்றால் உங்களது மருத்து சீட்டை காண்பித்து விளக்கம் அளித்து பயணம் செய்யலாம்.இதற்கு இ ரிஜிஸ்டர் தேவை இல்லை.


தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது.முதலில் ஒருவாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் ஒருவாரகாலம் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  


தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்றார்.
 > தமிழ்நாட்டில் பவர்கட் ஏற்பட்டு வருவது ஏன் தெரியுமா?’ - அமைச்சர் செந்தில் பாலாஜியின்       விளக்கம்
                                                     

Tags: Corona tamilnadu lockdown Corona Lockdown corona queries

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !