மேலும் அறிய
Advertisement
TNEB announcement: மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம் - மின்வாரியம் அதிரடி!
மின் கட்டணம் அதிகமாக வருகிறது என்ற குற்றச்சாட்டை பயனாளர்கள் முன்வைத்திருந்த நிலையில் மின்சார வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது
தமிழகத்தில் மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டுக்கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்துகொள்ளலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு கணக்கிட வேண்டும் ?
- மின் பயனாளர்கள் சுயமாக மதிப்பீடு செய்துகொள்ள, தங்கள் வீட்டில் மின் கணக்கிடும் மீட்டரை ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- வாட்ஸ் அப் , மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தபால் என அனைத்து வழிகளிலும் அனுப்பலாம் மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கலாம்
- மின் வாரிய அதிகாரிகளின் தொலைபேசி எண் http://www.tangedco.gov.in/ இணையதளத்தில் எடுத்துக்கொள்ளலாம்
- இவ்வாறு செய்யும் பயனாளர்கள் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்தவேண்டும்.
- மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்கவேண்டும்.
- பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்.
கடந்த மாதம் பொதுமக்கள் பலர் மின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் "SELF ASSESEMENT READING" எனும் நாமே கணக்கிட்டு கொள்ளும் முறையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion