திருவண்ணாமலை: தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு
ஆரணி பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு பாதுகாப்பு கேட்டு மின்சார வாரிய துறையினர் காவல்நிலையத்தில் புகரால் பரபரப்பு
திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு 9;30 மணி முதல் 1 மணி வரையில் மின் வினியோகம் இல்லாததால் 4மணி நேரமாக புழுக்கத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் மின்தடை என்பது பொதுவாக சூறைக்காற்று, பாலத்த இடி மற்றும் கன மழை, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மட்டுமே மின் தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த இடர்பாடுகளும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு வேளையில் 4 மணி நேரம் மின்தடை நீடித்ததால் குழந்தைகள் நோயாளிகள் முதியவர்கள் என பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இன்னும் 15 நாட்களில் தமிழக முழுவதும் நடக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொது தேர்வுக்கு படித்து வரும் மாணவ ,மாணவிகளும் அறிவிக்கப்படாத மின்தடையால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி கிராம புறங்களில் மின்தடை அதிகரித்து வருவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் எரைக்க முடியாததால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது சிங்காரப்பேட்டையில் உள்ள மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக மின் தடை ஏற்பட்டது என தெரிவித்தார். தமிழகத்தில் மின் தடைக்கு வாய்ப்பில்லை என சட்டசபையில் மின்துறை அமைச்சர் அறிவித்த நிலையில் இரவு நேரத்தில் தொடரும் மின் தடையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.இந்நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றி வட்டார பகுதிகளான சேவூர் முள்ளிபட்டு ஓண்ணுபுரம் கண்ணமங்கலம் எஸ்.வி.நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றன. மேலும் இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிகுள்ளாளாயி வருகின்றனர். தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் இருட்டில் படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளன.
இதனால் மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு சரிவர பதிலக்கவில்லை. இதனால் ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள மின்சாரவாரிய அலுவலகத்தில் ஓரு சில இளைஞர்கள் மின்வெட்டு பற்றி கேட்டறிய அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் சரிவர பதிலக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்துவர்கள் திடிரென மின்சார அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமடைந்த மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்நிலையத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்துள்ளனர்.ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னெறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு காரணத்தினால் மர்மநபர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.