மேலும் அறிய

CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் தமிழகத்தில் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,

”தமிழகத்தில் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு நடக்கும் கூட்டம் இது. இந்த தொற்று நோய் காலத்தில் மாவட்டங்களில் மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி வரும் உங்களுக்கு பாராட்டுக்கள். கொரோனா நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். நாளை முதல் நமது மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த சூழலில், மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு தேவையான தரமான உணவுப்பொருட்கள், பால், குடிநீர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதை பார்த்துக்கொள்ளவேண்டும்.

CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

வீதிகளில் வாகனம்/ தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வரவேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து நோய்த்தொற்றை கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். நோயாளர்கள், நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை ஆகியவற்றை அடைவதில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை எந்தவித தொய்வுமின்றி மேற்கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தொடரவேண்டும்.

மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அயராது தொடர வேண்டும்.

CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதேசமயம் அனுமதிக்கப்பட்ட பணிகளான விவசாய இடுபொருட்கள், வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்து எந்த தடையும் இல்லாமல் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தும் செயல்படலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவீதத்தை குறைப்பது ஒன்றே குறிக்கோளாக செயல்படவேண்டும்.

இந்த காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்தவேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரை நியமிக்கலாம்.

CM Stalin on Lockdown : முழுமையான ஊரடங்கை உறுதிசெய்யவும் - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு, அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அதற்காகவே, இந்த முழு ஊரடங்கு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே இந்த ஊரடங்கு. மாவட்ட ஆட்சியர்கள், உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை ஆற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget