மேலும் அறிய

நீட், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. மே மாதம் பொறுப்பேற்றது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021-ஆம் ஆண்டு சட்டசபையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில், கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக 5 ஆயிரத்து 570 வழக்குகள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.


நீட், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இதன் தொடர்ச்சியாக கடந்த 13-ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றும்போது, நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனவும் அறிவித்திருந்தார்கள்.  அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், டாஸ்மாக்  மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும் என மொத்தம் 868 வழக்குகளைத் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைந்தது. சுமார் 4 1/2 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில், தற்போது எட்டுவழிச்சாலை, நீட் தேர்வு, மதுபானக்கடைகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget