கிறிஸ்தவ புனிதத் திருத்தலம் வேளாங்கண்ணி: தினசரி ரயில் சேவைக்கு பாஜக எம்.பி. தீவிர முயற்சி
அன்னை மரியாவின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் புனித யாத்திரை செல்வதால், தினமும் ரயில் இணைப்பு வேண்டும் என்று MPக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்குச் செல்ல கேரளாவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் நிறைய கிறிஸ்தவர்கள் செல்கிறார்கள். இது முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்று. வேளாங்கண்ணியில் ரயில் நிலையம் இருந்தும் ரயில் இணைப்பு வசதி குறைவாகவே உள்ளது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொடர்ந்து பேசி வந்த மாவேலிக்கரை MP கொடிக்குன்னில் சுரேஷுக்கு சமீபத்தில் நல்ல பதில் கிடைத்தது.
வேளாங்கண்ணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் எண். 6361/16362-ஐ தினமும் இயக்க முடியுமா? என்று பரிசீலிக்க சம்பந்தப்பட்ட இயக்குனரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்தார். இதனால், வேளாங்கண்ணிக்கு தினமும் ரயில் சேவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி, அன்னை மரியாவின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
கேரளாவிலிருந்து ரயில் எண். 16361 எர்ணாகுளம் சந்திப்பு-வேளாங்கண்ணி வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வேளாங்கண்ணியை அடையலாம். இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது. மறுமார்க்கத்தில், ரயில் எண். 16362 வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. இது தவிர, கோவாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஹூப்பள்ளி மற்றும் சேலம் வழியாக வாரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே உள்ளது.
பெரும்பாலான பயணிகள் வேளாங்கண்ணியை அடைய இணைப்பு ரயில் அல்லது வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து பயணிகள் கூறுகையில், "நேரடி ரயில் இல்லாததால், திருச்சி முதல் வேளாங்கண்ணி வரை தனி வாகனம் மூலம் செல்லவேண்டியதால் செலவு தொகை அதிகம் ஏற்படுகிறது மேலும், பெரும்பாலானவர்கள் பயணத்தை கடினமாகக் கருதுகின்றனர். புனித யாத்திரைகள் பொதுவாக வயதானவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களால் இதுபோன்ற இணைப்பு பயணங்களை மேற்கொள்ள முடியாது என்கின்றனர்.
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் ரயில் சேவை வேண்டும் என்பது பல வருட கோரிக்கை. கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரை செல்வதால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே ரயில் சேவை உள்ளது. இதனால் பயணிகள் அதிக சிரமம் அடைகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் இணைப்பு ரயில் மற்றும் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.





















