மேலும் அறிய
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
திமுகவின் பவள விழா கூட்டத்தில் பங்கேற்க காஞ்சிபுரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு முன்னாள் முதலமைச்சர் அண்ணா வாழ்ந்த வீட்டிற்குச் சென்றார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணா வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய குறிப்பு
Source : abp
காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா வீட்டிற்குச்சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.
திமுக பவளவிழா கூட்டம்:
திமுகவின் 75வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காஞ்சிபுரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தந்த நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பு:
அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அண்ணா வாழ்ந்த வீட்டில் உள்ள வருகை பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின், வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதியிருந்தார்.
அவர் எழுதியதாவது “ மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம் ” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















