CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: பிரதமர் மோடியை டெல்லியில் அவரது இல்லத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
CM Stalin Delhi: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய, நிலுவத்தொகையை வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்:
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, தமிழ்நடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் பலர் தலைநகரில் வரவேற்றனர். தொடர்ந்து, இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான அமல்படுத்துவதற்கான, நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார். மோன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், அவர ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள், கனமழை கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர் பேரிடர் நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக முதலமைச்சர் கடந்த டிசம்பரில் பிரதமரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.