மேலும் அறிய

CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு

CUET UG PG Change: யுஜிசி, திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட உள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம்.

க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் அடுத்த ஆண்டில் இருந்து மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள்

இந்தியா முழுவதும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர Common University Entrance Test (CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் சேர வேண்டும். வல்லுநர் குழுவின் அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளில் இருந்து வரும் பரிந்துரைகளின் அடிப்படையில், க்யூட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த, திறமையான மற்றும் சாதகமான சூழலை வழங்குவதற்கு தேர்வு செயல்முறையை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன் அடிப்படையில், யுஜிசி CUET- UG மற்றும் CUET- PG தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

வல்லுநர் குழு அளித்த ஆலோசனைகள்

இந்தக் குழு தேர்வு முறையின் பல்வேறு கூறுகளை குறிப்பாக, அதன் கட்டமைப்பு, மொத்த தாள்களின் எண்ணிக்கை, பாடத்திட்ட அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள், பரிந்துரைகளை யுஜிசிக்கு அளித்தது.

அதன் அடிப்படையில் யுஜிசி, திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட உள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம்’’ என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

க்யூட் தேர்வில் நடந்த குழப்பங்கள்

முதன்முதலாக 2022-ல் நடந்த CUET- UG  தேர்வு, தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு பாடத்திற்கான தேர்வுகள் பல ஷிப்டுகளில் நடத்தப்பட்டதன் காரணமாகக, முடிவுகளை அறிவிக்கும் போது மதிப்பெண்களை இயல்பாக்க (நார்மலைசேஷன்) வேண்டி இருந்தது.

அதேபோல 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹைப்ரிட் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. எனினும் டெல்லி முழுவதும் தேர்வு நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?

Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !

Embed widget