மேலும் அறிய

CM Stalin: ’துபாயில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு, துபாயில் ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.8.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர்  கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா" தொடங்கி வைத்தார்.

அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ இந்தத் துறையின் கடந்த இரண்டு ஆண்டுகால வளர்ச்சிக்கு  அமைச்சர் தா.மோ அன்பரசனின் உழைப்பே சான்று! கல்வி சிறந்த தமிழ்நாடு கலைகள் சிறந்த தமிழ்நாடு என்பதுபோல தொழில்கள் சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுடனான தொழில்நிறுவனங்கள் முக்கியம்தான். ஆனால், சிறு - குறு தொழில்களின் வளர்ச்சி அதைவிட முக்கியமானது. அந்த வகையில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு அக்கறை செலுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் பங்கு முக்கியமானது.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையும் தொழில்கட்டமைப்பையும் மேம்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் "சமூகநீதியுடன் கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி" என்ற அடிப்படையில் இதுவரை நடக்காத அளவு பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில் வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சியையும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அமைச்சர் என்னிடம் கூறியபோது, இந்த நிகழ்ச்சியை நான் கோவையில நடத்த அவரைக் கேட்டுக் கொண்டேன். ஏன்னென்றால் கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்!

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், சுமார் 450 அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் வர இருக்கிறார்கள். அதேபோல், புத்தாக்கங்கள், பத்தொழில்கள் மற்றும் முதலீடுகள் பற்றி நடக்க கருத்தரங்குகள் சந்திப்புகளில் சுமார் 1500 பேர் பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.  ஐம்பதுக்கும் மேற்பட்ட வல்லுநர்களின் கருத்துரைகள் இடம்பெற இருக்கிறது. இது பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது இங்கு வருகை தந்திருக்கிற முதலீட்டாளர்கள் எல்லோரையும் மனதார வரவேற்கிறேன்.

புத்தாக்கங்கள் மற்றும் புதுயுகத் தொழில் முனைவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகவும் கொண்டு, நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு "Tamil Nadu Startup and Innovation Mission' உயிர் கொடுக்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும்.

2021 மார்ச் மாத நிலவரப்படி சுமார் 2300 ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தப் பிறகு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அதற்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகளுக்குத் துணைநிற்கின்ற வகையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இது தொடர வேண்டும்.

புத்தாக்க சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற. தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு, 'டான்சீட்' எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய்க்கும் மேல்  நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, பெரு நகரங்களைத் தாண்டி மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022-23ஆம் நிதி ஆண்டு மதுரை. ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில், வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டாம். மூன்றாம் கட்ட நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவிட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முன்னெடுப்பில் சமூக நீதியை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆதிதிராவிட மக்களால் நிறுவப்படுகிற புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக வழங்க கடந்த நிதி ஆண்டு 30 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த ஜூலை மாதத் தரவுகள் இருக்கிறது மந்தமான முதலீட்டுச் சூழலிலும் சென்னை சார்ந்த நிறுவனங்கள் மேல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது.

உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு, உலக வர்த்தக மையமாக மாறிவரும் துபாயில், ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது” என குறிப்பிட்டார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget