கடலூர் மாலினி பாலாஜி: நீரில் 15 நிமிடம் மிதந்து சாதனை! யோகா மூலம் அசத்தல், குவியும் வாழ்த்து
ஜலயோகா மூலம் கடிமையான பயிற்சி முறையில் நீரில் தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை மிதக்கி சாதனை படைத்த பெண்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் மாலினி பாலாஜி (45). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் யோகாசனம் பயிற்சி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் யோகாசனத்தில் ஒரு பிரிவான ஜலயோகா மூலம் கடிமையான பயிற்சி முறையில்
நீரில் தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை மிதக்கி சாதனை படைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சவுத் இன்டியன் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யோகசனத்தில் சாதனை
சாதனை குறித்து அவர் கூறுகையில், இந்த பயிற்சியை நிகழ்த்துவற்கு உடல் மனம் ஒருங்கிணைப்பு மற்றும் சுவாச பயிற்சி அவசியம் தேவை, மேலும் உணவு கட்டுப்பாடு அவசியம், தினமும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு யோகாசனம், தியானம் பயிற்சி மேற்கொள்வேன். இதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்ததனால் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யோகா படிப்பில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றேன். தொடர்ந்து அடுப்பு ஊதும் பெண்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வரியின் அடிப்படையில், எனது குருநாதர் ஆனந்த பால் யோகி மூலம் இந்த ஜலயோக பயிற்ச்சியை கடினமாக கற்று தினந்தோறும் பயிற்சி எடுத்து வந்தேன். இது எனக்குள் பெரிய மாற்றத்தையும், சாதனை படைக்க வேண்டும் என உள்ளுணர்வு கூறியது அதனையடுத்து தற்போது தண்ணீரில் தொடர்ந்து 15 நிமிடங்கள் மிதக்கி இந்த சாதனையை செய்துள்ளேன்.

சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்
சாதனையை பாராட்டி சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர் பாராட்டி இந்த விருதை வழங்கி உள்ளனர். மேலும் வரும் நாட்களில் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் சாதனை நிகழ்த்த முழு நேர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இது தொடர்ச்சியான பயிற்சி, ஒழுக்கம் மற்றும் மன உறுதியால் அடையப்படுகிறது. மேலும் இது உடல் நலம் மட்டுமின்றி, வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இது எனக்குள் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது” எனக் கூறினார்
உடன் டாக்டர் பாலாஜி சுவாமிநாதன், யுவராஜ்,வித்யா லெட்சுமி மற்றும் சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர் இருந்தனர்.




















