Rain Alert : கவனம்.. 13 மாவட்டங்களில் கனமழை.. இந்த மாவட்டங்களில் மழை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுது..
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
![Rain Alert : கவனம்.. 13 மாவட்டங்களில் கனமழை.. இந்த மாவட்டங்களில் மழை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுது.. Chennai: The Chennai Meteorological Department has forecast heavy rains in 13 districts in Tamil Nadu tomorrow and the day after tomorrow Rain Alert : கவனம்.. 13 மாவட்டங்களில் கனமழை.. இந்த மாவட்டங்களில் மழை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/30/3c60f4d3ecf88f80d46dd4afe2e535c1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நிலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
5,6,7.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெரம்பலூர் (பெரம்பலூர்) 4, கெட்டி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 1, அம்முண்டி (வேலூர்), வேப்பூர் (கடறூர்), கோத்தகிரி (நீலகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), எடப்பாடி (சேலம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2 சிற்றாறு (கன்னியாகுமரி), ஆண்டிப்பட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சி) குப்பணம்பட்டி (மதுரை) கரையூர் (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
7.062022: தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரளா- கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)