மேலும் அறிய

கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது! பின்னணியில் யார்?...உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவம் முன்பே திட்டமிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார். மேலும் மாணவர்களின் டி.சி.க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது என கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரும் ஏன் போராட்டம் நடத்தினீர்கள் என ஸ்ரீமதியின் பெற்றோரிடம் கேள்வியெழுப்பினர். வன்முறை சம்பவம் கட்டுக்குள் வந்தவுடன் வேலை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என தெரிவித்த அவர், வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

 வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் சிறப்பு படை அமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏற்பட்ட இழப்பீடை வசூலிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 29ம் தேதி போலீஸ் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த மாணவியின் தந்தை ஜூலை 14 ஆம் தேதி தான் ஊருக்கு வந்தார் என்றும், வன்முறைக்கு தாங்கள் (ஸ்ரீமதியின் பெற்றோர்) காரணமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் இறப்பின் தவறு இல்லை என்று கூறிவிட்டால், வன்முறையால் ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்க முடியுமா? என நீதிபதி கேள்வியெழுப்பினார். தமிழ்நாடு அமைதி பூங்கா என்கிறார்கள் ஆனால் நீங்கள் அதை முற்றிலும் மாற்றிவிட்டீர்கள் நீதிபதி  சதீஷ்குமார் காட்டமாக தெரிவித்தார். 

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் கொடுக்காமல் இருக்க தகுந்த அறிவுரைகளை வழங்குமாறு வழக்கறிஞர்களுக்கு தெரிவித்த  நீதிபதி சதீஷ்குமார், மறு உடல் கூராய்வுக்கு அனுமதியளித்து வழக்கு விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
IPL Auction 2025 LIVE: 4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
IPL Auction 2025 LIVE: 4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Embed widget