மேலும் அறிய
Advertisement
Chennai Book Fair: புத்தக பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் ..! புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு
Chennai Book Fair 2022 Dates: ஜனவரி மாதம் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சிக்கு மீண்டும் அனுமதி
ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தக கண்காட்சி, கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45-வது புத்தக கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தக கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் (பபாசி) , முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புத்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion