மேலும் அறிய
Advertisement
தொடரும் கடத்தல்..! 14 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!
கடத்தல் ஆசாமியை கைது செய்த சுங்கத்துறையினர், கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகளை,மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புகின்றனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 27 வயது ஆண் பயணி ஒருவர், பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அந்தக் கூடைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்தப் பயணி, கூடைக்குள் குழந்தைகள் விளையாடும், ரப்பரில் செய்யப்பட்ட பாம்புகள், பல்லிகள், எலிகள் போன்ற பொம்மைகள் இருப்பதாக கூறினார்.
ரப்பர் பாம்புகள்
ஆனாலும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவருடைய கூடையை திறந்து பார்த்து சோதனை செய்தனர். கூடைகளுக்குள் உயிருடன் கூடிய பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள், அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்து கடத்தி வந்த அந்தப் பயணி, இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல், விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி, பாம்பு குட்டிகளை எடுத்து, தனது உள்ளங்கைகளில் வைத்து காட்டினார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு, அருகே வந்து பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர். அதோடு அந்த கூடடையை தனியே எடுத்து வைத்தனர்.
ஆபத்தானவைகள்
அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 14 பாம்பு குட்டிகள் இருந்தன. அதில் 12 பாம்பு குட்டிகள், பால் பைத்தான் எனப்படும், ஒருவகை மலைப்பாம்பு குட்டிகள், 2 பாம்பு குட்டிகள், கிங்ஸ் ஸனேக் வகையைச் சேர்ந்தவைகள். இந்த மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும், வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர் பிரதேசங்களில் இருக்கக்கூடியவைகள். இந்த பாம்பு குட்டிகள் விஷமற்றவை. ஆனாலும் ஆபத்தானவைகள் என்பதை கண்டுபிடித்தனர்.
மிகவும் அதிக விலைக்கு விற்பனை
அதன் பின்பு இந்த பாம்பு குட்டிகளை கடத்தி வந்த கடத்தல் பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விஷமற்ற இந்த வகை பாம்பு குட்டிகள், வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தால், இங்கு சில வாரங்கள் வளர்த்து, ஓரளவு பெரியதாக மாறியதும், மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவோம் என்று கூறினார். இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு இந்த 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும், தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான விமான செலவுகள் அனைத்தையும், கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion