மேலும் அறிய

Rain Alert: அடுத்த 3 மணி நேரம்.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

1. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2.  மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

திருத்தணி (திருவள்ளூர்) 13, தாம்பரம் (செங்கல்பட்டு) 11, செஞ்சி (விழுப்புரம்) 10, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 9, பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 8, சோலையார் (கோயம்புத்தூர்), காஞ்சிபுரம், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), திருவள்ளூர், திருத்தணி PTO (திருவள்ளூர்)  தலா 7, போளூர் (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, மேலாலத்தூர் (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா  6, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வேலூர், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 5, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சின்கோனா (கோயம்புத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), ஏற்காடு (சேலம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), திருப்பத்தூர், சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை),  மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு)தலா 4,  மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), ராயபுரம் (சென்னை), மதுரவாயல் (சென்னை), சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருப்பத்தூர் PTO வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), லக்கூர் (கடலூர்), கோடிவேரி (ஈரோடு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), சிற்றாறு-I (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), கல்லந்திரி (மதுரை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்), மேட்டூர் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), குடியாத்தம் (வேலூர்), காட்பாடி (வேலூர்), அம்முண்டி (வேலூர்), சத்யபாமா பல்கலைக்கழகம்  ARG (செங்கல்பட்டு) தலா  3,  எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை),  அடையார் (சென்னை), உத்தண்டி (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தானியமங்கலம் (மதுரை), இலுப்பூர் (புதுக்கோட்டை), மின்னல் (ராணிப்பேட்டை), முசிறி (திருச்சிராப்பள்ளி), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 2, செங்கல்பட்டு, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம்,  கத்திவாக்கம் (சென்னை), மணலி (சென்னை), கொளத்தூர் (சென்னை), திரு.வி.கே.நகர் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), அடையார் (சென்னை), பெருங்குடி (சென்னை), பெருங்குடி (சென்னை), அன்னூர் (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), பவானிசாகர் (ஈரோடு), புத்தன் அணை (கன்னியாகுமரி), குளித்தலை (கரூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி, மேலூர் (மதுரை), பெரியபட்டி (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, சொளிங்கர் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), பொன்னை அணை (வேலூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), YMCA நந்தனம் ARG (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), தரமணி ARG  (சென்னை) செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு)  தலா  1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
27.09.2023 மற்றும் 28.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
27.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 

27.09.2023: இலட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்". இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget