மேலும் அறிய

Rain Alert :தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

தமிழகத்தில அடுத்த 3 மூன்று தினங்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”1.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  இன்று காலை ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை  ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16-ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில்  திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை  ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

2.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது.

இதன் காரணமாக,

14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

15.11.2023: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

19.11.2023 மற்றும் 20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் பொதுவாக மிதமான மழை  பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
வங்க கடல் பகுதிகள்: 
14.11.2023: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2023: மத்தியமேற்கு-வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடஆந்திர-ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2023: மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடஆந்திர-ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
17.11.2023: வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வட ஆந்திர, ஒரிசா,  மேற்குவங்க, வங்கதேச கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
18.11.2023: வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒரிசா,  மேற்குவங்க, வங்கதேச கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Embed widget