தடுப்பூசி குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு சொல்கிறோம் - ரவிக்குமார் எம்.பி-க்கு பதிலளித்த மத்திய அமைச்சர்
செங்கல்பட்டு எச்.எல்.எல் தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலித்து தெரிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் அதிகரிப்பு, ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிப்பு, சாதாரண படுக்கைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பதற்காக உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தத்திற்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எச்.எல்.எல். தடுப்பூசி உற்பத்தில ஆலையில் தடுப்பூசி தயாரிப்பை தொடங்கவேண்டும் என்றும், அந்த ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் எம்.பி. இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், “செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 14-ஆம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 31, 2021
ரவிக்குமார் எம்.பிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம்
செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல் பயோடெக் லிமிடெட் என்ற தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 14-ஆம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள்
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 31, 2021
“எச்எல்எல் பயோடெக் லிமிடெட் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார் pic.twitter.com/kOIfZKeD49
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 31, 2021
அதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் எச்.எல்.எல். பயோடெக் லிமிடெட் வளாகத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.