மேலும் அறிய

ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் மாவட்டம் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் ஊராட்சி மன்றத்தலைவராக சந்திரசேகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6  மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குறிப்பாக இந்த 9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,  2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்  என மொத்தமாக 27,003 பேருக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்தனர். இதோடு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்கள், கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பணியிடங்கள்119, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில 5 பணியிடங்கள் போட்டியின்றி நிரப்பட்டன.

ஆனால் சற்று வித்தியாசமாக தென்காசி மாவட்டத்தில் குடவோலை முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிரப்பப்பட்டள்ளது. குறிப்பாக  பழங்காலத்தில் தான் கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பதற்காக குடவோலை முறை நடைமுறையில் இருந்தது. இதில் தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதிய  பிறகு அதை மொத்தமாகக் கட்டி ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

அந்த நடைமுறைத்தான் தற்போது  தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் நடந்துள்ளது.  இங்கு தலைவர் பதிவிக்கு  போட்டியிட்ட சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் தலா 1034 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் யாரை ஊராட்சிமன்றத்தலைவராக நியமனம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இருவரும் சம வாக்குகளைப் பெற்றதையடுத்து பழைய நடைமுறையப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வானார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Embed widget