Narikuravar Community - ST : நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மலைப் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் தரப்பட்டதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தகவல் தெரிவித்துள்ளார்.
Cabinet okays proposal to add Narikuravar community living in hills of Tamil Nadu in Scheduled Tribes list: Union Minister Arjun Munda
— Press Trust of India (@PTI_News) September 14, 2022
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடியிடமும், முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், நரிக்குறவர் சமூகத்தினர் தவிர இதர சமூகத்தினரும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் உள்ள ஹட்டி சமூகத்தையும் பழங்குடியினர் பட்டியலில்( எஸ்டி) சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- சத்தீஸ்கரில் பிரிஜியா சமூகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Union Cabinet approves proposal to add Brijia community to list of Scheduled Tribes in Chhattisgarh: Union Minister Arjun Munda
— Press Trust of India (@PTI_News) September 14, 2022
Cabinet nod to add Hatti community in Trans-Giri area of Himachal Pradesh's Sirmaur district to ST list: Union Minister Arjun Munda
— Press Trust of India (@PTI_News) September 14, 2022
மலைவாழ் சமூத்தினர், தங்கள் அடிப்படை வசதி பெறுவதற்கான விழிப்புணர்வு இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இச்சமூகத்தினர் கல்வி கற்பது என்பதே பெரிய விடயமாக பார்க்கப்பட்டது. இச்சமூகத்தினர் மலைப் பகுதிகளில் வாழ்வதாலேயே , பிற சமூக மக்களை விட பொருளாதாரத்திலும், அடிப்படை வசதி பெறுவதிலும் பின் தங்கியுள்ளனர்.
அதனை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளதாக பழங்குடியினர் விவகார துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தகவல் தெரிவித்துள்ளார்.