கடைகள் மற்றும் பேருந்து சேவைக்கு இன்றும் நாளையும் அனுமதி - தமிழக அரசு

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து சேவைகள் இன்று மற்றும் நாளை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள் இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு சட்டமன்ற ஆலோசனைக்குழு மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த குழுவினர் அளித்த பரிந்துரையின்படி, தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கடைகள் மற்றும் பேருந்து சேவைக்கு இன்றும் நாளையும் அனுமதி - தமிழக அரசு

தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி, மாநிலம் முழுவதும் இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட உள்ளது. இதுதவிர, போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.கடைகள் மற்றும் பேருந்து சேவைக்கு இன்றும் நாளையும் அனுமதி - தமிழக அரசு

இதையடுத்து, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஒரு வார முழு ஊரடங்கு காரணமாக, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் பல்வேறு சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சேவைகள் செயல்பட நாளை அனுமதிக்கப்பட்டாலும், மிகப்பெரிய வணிக நிறுவனங்களான மால்கள் செயல்பட தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படவில்லை.

Tags: Tamilnadu lockdown allowed coronavirus Shops bus service

தொடர்புடைய செய்திகள்

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு