மேலும் அறிய

ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூரில் உள்ள நிலத்தில் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது

பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்து கொள்ள நீதிபதி யோசனை தெரிவித்த நிலையில்,  சென்னை செங்குன்றம் பொத்தூர் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஒப்புதல் தெரிவித்தார்.

குடியிருப்பு நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், முதலில் அரசு ஒதுக்கிய நிலத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் விசாலமான வேறு இடத்தை வாங்கி, அங்கு மாற்றிக் கொள்ளலாம் என, ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கோரிக்கை: பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்து விட்டதால், தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டுவது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது.

வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தற்போது உடலை அடக்கம் செய்ய அரசு 200 சதுர அடிநிலம் ஒதுக்க தயாராக உள்ளதாகவும், திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு மணிமண்டபம் அமைக்கலாம் எனவும் தெரிவித்தார். 

பொற்கொடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, பெரம்பூரில் உறவினருக்கு சொந்தமான 7,500 சதுர அடி நிலம் உள்ளது. அதில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி: பெரம்பூரில் மனுதாரர் தரப்பில் தெரிவித்த 7,500 சதுர அடி நிலம் தொடர்பான வரைபடத்தைப் பெற்று பார்வையிட்ட நீதிபதி, எல் வடிவில் அமைந்துள்ள இந்த இடம், குடியிருப்பு நிலம் என்பதால் அதில் எப்படி அனுமதி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் தான் புதிதாக மனு அளிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, புதிய இடத்தில் அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம் எனத் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். அரசு அனுமதி பெற வேண்டும். அதுவரை உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும்.  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உடல் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்த பின், வேறு இடத்துக்கு மாற்றலாம். புதிய இடத்தில் அடக்கம் செய்வதற்கான, மணி மண்டபம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் உடலை அடக்கம் செய்ய இயலாது. இதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய கோரிய விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது எனத் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்ட முடியாது. அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடம் உள்ளது. ஆனால், உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. அதேபோல, உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு விசாலமான இடத்தை தேர்ந்தெடுத்து, அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம். எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் இடையூறுகள் இருக்காது எனவும் நீதிபதி குறிப்பிட்டார். 

இதையடுத்து, தற்போதைக்கு அரசு ஒதுக்கும் நிலத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்கும்படி மனுதாரர் பொற்கொடி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், சென்னை செங்குன்றம் பொத்தூர் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஒப்புதல் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
Embed widget