Suriya Siva Suspended: ’ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’ : கட்சி பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்: அண்ணாமலை அதிரடி
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அக்கட்சியின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர் சூர்யா சிவாவை மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாஜகவின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர் சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்ஸியிடம் சூர்யா சிவா செல்போனில் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது.
அந்த உரையாடலில் சூர்யா சிவா, டெய்ஸியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையில் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு குழுவும் அமைக்கப்பட்டது. இருவரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இந்நிலையில், பாஜகவின் அண்ணாமலை, சூர்யா சிவாவை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகிய இருவரும் நடந்ததை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும்.
ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர்.
பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பாரதிய ஜனதா கட்சி. தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல் நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம்.
பெண்களை பொது மேடைகளில் கொச்சை படுத்துபவர்கள், ஆபாச காணொளியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்.
நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது (Burden of Leadership).
ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டராக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்.
அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரைத் தேடி வரும் என்று அந்த அறிவிப்பில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.