Judges Transfer: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உட்பட 7 பேரை மாற்ற கொலிஜியம் பரிந்துரை; அடுத்த தலைமை நீதிபதி யார்?
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உட்பட 7 பேரை மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் டி. ராஜா, நீதிபதி வேலுமணி உட்பட 7 பேரை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனிஸ்வர்நாத் பண்டாரி செப்டம்பர்-12 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு, எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, செப்டம்பர் 22-ஆம் தேதி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார்.
மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961-ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிறந்தார். தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்தார். உயர்கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ மற்றும் ஏம்.ஏ படிப்பை மதுரை கல்லூரியிலும் நீதிபதி டி.ராஜா முடித்தார்.
சட்டப்படிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரியில் முடித்து, கடந்த 1998-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜுனியராக பணியாற்றினார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். அவர் சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்பு 2009-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் டி. ராஜா உட்பட 7 நீதிபதிகளையும் மாற்றம் செய்ய கொலிஜியம் குழுவானது பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
அடுத்து யார்?:
இதற்கிடையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், இன்னும் ஒப்புதல் தரவில்லை. இதனால், உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Also Read: Chief Justice Of India : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் டி.ஒய். சந்திரசூட்..? யார் இவர்?