மேலும் அறிய

’தமிழ்நாடு பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது’ – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை

"ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1 ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்."

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது.  "இந்நாளினை பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி, 'தமிழ்நாடு நாள்' என்று சிறப்பாக கொண்டாடப்படும்" என்று கடந்த 2019 ஜூலை 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அன்றைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்" என்று கூறியுள்ளார்.

ஆனால், அக்டோபர் 30 ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மாநிலம் என்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 ஜூலை 18 ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

1956 நவம்பர் 1 ஆம் தேதி தமிழ் மொழி பேசும் மக்களை கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18 ஆம் தேதி தான் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனை பல்வேறு தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1 ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.

குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று வரலாற்றை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Embed widget