கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 48ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை விழா.
பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது. திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. .
கரூரில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 48ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை விழா நடைபெற்றது.
கரூர் அருகே வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 48ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சியானது பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது.
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இருந்து பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பால்குடம், புனித தீர்த்தக்குடங்கள் சுமந்தபடி பக்தர்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, கரூர் அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு வந்து திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
48 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு படிக்கும் தேங்காய், பழங்கள், வெற்றிலை கற்பூரத்துடன் வைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கீழிருந்து தொடங்கிய படிபூஜை மேல்படிகட்டு வரை சென்று சிறப்பாக நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும், அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சஷ்டி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா-பக்தர்கள் சுவாமி தரிசனம்.
கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் மெயின் ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாதித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தேகமாக யாக சாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார் முதல் மற்றும் இரண்டு கால யாக வீழ்வினை நடத்தினார். அதை தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடத்தை சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு கும்பாபிஷே விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழா.
கரூர் நகர பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்த வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு கார்த்திகை மாத சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி , பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து மூலவர் கணபதியை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.