தருமபுரியில் அதிர்ச்சி! சட்டவிரோத கருக்கலைப்பு: மருத்துவர் எச்சரிக்கை! தன்னார்வலர்கள் களத்தில்!
தருமபுரியில் மருத்துவ துறை சார்பில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி.

தருமபுரியில் மருத்துவ துறை சார்பில் அனைவருக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க நல சேவைகள் உரிமைகள் கிடைக்கச் செய்வோம் என்ற தன்னார்வலர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்ளது. இந்த நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் மருத்துவர் எம்.சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்த கருத்தரங்கில் பேசிய மருத்துவத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி, பெண்களுக்கு ஆண் குழந்தைகள் மேல் இருக்கின்ற மோகத்தால், கருத்தரித்த கர்ப்பிணிகள் சட்ட விரோத கருக்கலைப்பு செய்பவர்களிடம் சென்று மாட்டிக் கொள்கின்றனர். முறையாக மருத்துவம் படிக்காமல் அதிகளவிற்கு பணம் வசூல் செய்யும் நோக்கில் இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் பெற்றெடுத்த கர்ப்பிணிகளை குறி வைத்து புரோக்கர்களும் முறையாக மருத்துவம் படிக்காத ஒரு சிலரும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எந்த ஒரு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், தரையில் கர்ப்பிணிகளை வைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்கின்றனர். இதனால் பெண் குஜந்தைகளாக இருப்பவர்கள் அழுது கொண்டும், ஆண் குழந்தைகளாக இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவதும் போன்ற இந்த சூழல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் முறையாக படிக்காமல் மருத்துவமனையில் உதவியாளராகவோ, துப்புரவு பணியாளராகவும் பணியாற்றி விட்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் யாரேனும் செய்தால் உடனடியாக மருத்துவத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு தன்னார்வலர்கள் முற்றிலுமாக முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் நூற்றுக்கு 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.






















