அதிசார குரு பெயர்ச்சி 2025 - மேஷ ராசி பலன்
குருவைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஆவார் அப்படியானால் உங்களுக்கு செல்வங்கள் சேர்க்கின்ற முயற்சியும்....

குரு பெயர்ச்சி பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற காலங்களில் தானே வரும்... தற்பொழுது டிசம்பரில் குரு பெயர்ச்சி உள்ளதா? என கேட்கும் அல்லது யோசிக்கும் நபர்களுக்கு 'அதிசாரம்' என்ற வார்த்தையை இங்கே 'Introduce' செய்ய விரும்புகிறேன்...
அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்...
இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அதிசார குரு பெயர்ச்சி 2025 - மேஷ ராசி பலன்
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே மூன்றாம் இடத்தில் மிதுனத்தில் உங்களுக்கு இருக்கும் குரு பகவான் தற்பொழுது நான்காம் இடத்திற்கு பெயர்ச்சியாக போகிறார்.... குருவுக்கு பொதுவாக நான்காம் இடம் என்றால் மிகவும் பிடிக்கும் காரணம் கால புருஷ தத்துவத்திற்கு சந்திரன் நான்காம் இடமாக வருகிறது அந்த சந்திரனில் தான் குரு உச்சம் பெறுகிறார் தற்பொழுதும் உங்கள் மேஷ ராசிக்கு நான்காம் வீட்டில் உச்சம் பெறும் குரு பகவான் செல்வ செழிப்பான வாழ்க்கை தர தயாராக இருக்கிறார் முழுமையாக அனுபவிக்க நீங்கள் அடுத்த வருடம் குரு பெயர்ச்சி வரை காத்திருக்க வேண்டும் ஆனால் இந்த அதிசார பயிற்சியிலேயே சில நல்ல மாற்றங்களை தரப் போகிறார் குறிப்பாக சதா வாகன பிரச்சனையோடு வீடு பிரச்சனையோடு பயணிப்பவர்களுக்கு இதுதான் சிறப்பான காலகட்டம்... புதிய வாகனத்தை நிச்சயம் ஆக வாய்ப்பு உண்டு....
வீடு சம்பந்தமான தொந்தரவு இருந்தவர்களுக்கு அது விலகி உங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுக்கப் போகிறது... கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மேஷ ராசி அன்பர்களே விடிவு காலத்திற்காக காத்திருந்தீர்கள் அல்லவா இதோ வந்துவிட்டது ஒரு பிரச்சனை.... அது எப்படி தீர்க்கப்படும் என்று உங்களுக்கு தெரியவில்லை... யாராவது வந்து உதவி செய்வீர்களா என்றும் காத்திருந்திருப்பீர்கள்... இப்படியான சூழ்நிலையில் நான்காம் இடத்தில் வரும் குரு பகவான் நல்ல நிம்மதியான உறக்கத்தை தருவார் அதற்கு முன்பாக உங்களுடன் உங்களிடம் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்கப் போகிறார் தாயாரின் உடல்நிலை சீராகும் மருத்துவத்தின் மூலம்... ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கூட அது தற்பொழுது குணமாக வாய்ப்பிருக்கிறது... மறைவான இடங்களில் உங்களுக்கு கட்டிகளோ அல்லது புண்களோ ஏற்பட்டிருந்தால் மருத்துவத்தின் மூலம் தற்பொழுது அதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம் நல்ல பலன் கிடைக்கும்...
வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசைப்பட்டவர்களுக்கு குரு நான்கில் அமர்ந்து உங்களை அயல்நாடு கொண்டு செல்ல தயாராக இருக்கிறார்... கடல் கடந்து வேலைக்காக செல்பவர்கள் அல்லது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு வேலைக்காக செல்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டம் தான் எடுத்து வைக்கின்ற முயற்சிகள் நிச்சயமாக வெற்றி அடையும்....
குருவைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஆவார் அப்படியானால் உங்களுக்கு செல்வங்கள் சேர்க்கின்ற முயற்சியும்.... புதியதாக வீடு மனை வாங்க போகின்ற முயற்சியும் வெற்றி அடையும் என்பதை காட்டுகிறது... ஒன்பதாம் அதிபதி நான்காம் வீட்டிற்கு வரும் பொழுது அயல்நாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்பவும் உள்ளூரில் உள்ள மக்களையும் உறவினர்களையும் இன பந்துக்களை பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது அதனால் மேஷ ராசி அன்பர்களே வெளியூரில் வெளிநாட்டில் வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் உள்ளூருக்கு வர முயற்சி செய்வீர்கள்... கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்... எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக வங்கியிலேயே நீங்கள் கடன் வாங்கலாம்...
குரு பகவானின் அனுக்கிரகத்தை பெற நவகிரகத்தில் இருக்கும் குருவை வழிபட்டு வாருங்கள் நன்மையை பெற்றுச் செல்லுங்கள்... ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்ற இந்த மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரித்தால் பிரச்சனைகள் விலகும்...





















