ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் - இளவரசியின் பரபரப்பான வாக்குமூலம்
கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நலக் குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சசிகலா அண்ணன் மனைவி இளவரசி விசாரணையின்போது கூறியுள்ளார்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவியான இளவரசி இன்று ஆஜரானார். ஆணையத்திடம் அவர் எந்த மாதிரியான தகவல்கலை தெரிவிக்கப்போகிறார் என்று ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சசிகலா அண்ணன் மனைவி இளவரசி விசாரணையின்போது தெரிவிக்க தகவல்கள் வெளியாகியுள்ளனர். அதில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாகவும் கூறினார்.
மேலும், சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறிய இளவரசி, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், தன்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார் என்றும் கூறினார்.
#BREAKING | ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் - இளவரசிhttps://t.co/wupaoCQKa2 | #jayalalithaa #Chennai #Sasikala pic.twitter.com/4zzNUr8u4P
— ABP Nadu (@abpnadu) March 21, 2022
கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நலக் குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்.
2016 சட்டசபை தேர்தலின் போதும் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருந்ததாகவும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டதாகவும், தான் தினமும் சென்று பார்த்து வருவேன் என்ற அவர், 75 நாட்ளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன் என்றும் அதுவும் கண்ணாடி வழியாக தான் பார்த்திருக்கிறேன் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, விசாரணை நிறைவு பெற்று இளவரசி புறப்பட்டார்.
சசிகலா அண்ணன் மனைவி இளவரசி 75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்