ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி - தாய் ஊராட்சிமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதால் மக்கள் அச்சம்
’’ஒமிக்ரான் அறிகுறி இருக்கும் 38 வயது பெண்ணின் தாய் ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளதால் நேற்று ஊராட்சி மன்ற கூட்டத்தில் அவரது மகனுடன் பங்கேற்று இருந்தார்’’
![ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி - தாய் ஊராட்சிமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதால் மக்கள் அச்சம் Arani-based woman has been isolated at the Thiruvannamalai Medical College on suspicion of possessing omega-3s ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி - தாய் ஊராட்சிமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதால் மக்கள் அச்சம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/27/5a969d9af581939d500a6fcb033f0565_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை பூர்வீகமாக கொண்ட 38 வயது பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் ஆப்ரிக்காவில் உள்ள காங்கோவில் வசித்து வருகிறார். இவர்கள் மூவரும் காங்கோவில் இருந்து கடந்த 12 ஆம் தேதி இந்தியா திரும்பினர். அவர்களுக்கு 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 38 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒமிக்ரான் அறிகுறி உள்ள 12 பேரின் மாதிரிகள் பெங்களூருவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதையடுத்து செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் மருத்துவ குழுவினர் ‘பி.பி. கிட்’ அணிந்த செவிலியர் உதவியாளர்களுடன் ஆரணி அருகே உள்ள கிராமத்திற்கு சென்று வார்டு உறுப்பினராக உள்ள 38 வயது பெண்ணின் தாய்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அவர்களது குடும்பத்தினர் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தில் நடந்த ஊராட்சிமன்ற கூட்டத்தில் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்ட வார்டு உறுப்பினரும் அவரது மகனும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் அனைவரும் பயத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்படி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அவர்கள் குடியிருக்கும் தெரு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ABP NADU செய்தி எதிரொலி: ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கியது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)