(Source: ECI/ABP News/ABP Majha)
OPS Statement: ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க, அப்போலோ எதிர்ப்பு
Jayalalithaa Death Case: நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalithaa Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்(O Panneerselvam) நேற்று ஆஜரானார்.
நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக ஆஜரான ஓபிஎஸ், திருபரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி பேரவை இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் என தெரிவித்துள்ளார்.
#BREAKING | இடைத்தேர்தல் படிவங்களில் கைரேகை வைத்தது ஜெயலலிதாதான் - ஓ.பி.எஸ். https://t.co/wupaoCQKa2 | #OPanneerselvam #AIADMK #Jayalalitha pic.twitter.com/6sVPcRXRRi
— ABP Nadu (@abpnadu) March 22, 2022
இந்நிலையில், விசாரணயின்போது ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்கள் உடன் இருக்கவேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்