Arumugasamy Commission Enquiry LIVE: ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாள் விசாரணை நிறைவு..!
Arumugasamy Commission Enquiry LIVE Updates: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalitha Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்பான முக்கியச் செய்திகள்

Background
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalitha Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்(O Panneerselvam) நேற்று ஆஜரானார். அப்பொழுது, அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானதே என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார்
ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு(OPS) சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு நேற்று நேரில் ஆஜரானார்
ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாள் விசாரணை நிறைவு..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
Arumugasamy Commission OPS LIVE: ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார்.





















