TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
TN Rain Alert:வங்கக் கடல், அரபிக் கடல் இரண்டிலும் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா என்பது பற்றி இங்கே காணலாம்.
வங்கக் கடல், அரபிக் கடல் என இரண்டிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல்:
வங்கக்கடலில் வருகிற அக்டோபர், 22-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற அக். 20 ஆம் தேதி உருவாகும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subject: - A low-pressure area is likely to form over Central Bay of Bengal around 22 October pic.twitter.com/55wgo3EkIk
— IMD Kolkata (@ImdKolkata) October 18, 2024
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர்.24-ம் தேதி காற்றழுத்த தாழுவு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது மு;தல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல்:
அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது இந்தியப் பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?
வங்கக் கடல், அரபிக் கடல் இரண்டிலும் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்வதில் மாற்றம் ஆகியவற்றை பொறுத்தே தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா என்பது குறித்து உறுதியுடன் தெரிவிக்க முடியும் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
19.10.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.10.2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21.10.2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.10.2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.10.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.10.2024:
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்,ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.