மேலும் அறிய

Annamalai: தமிழகத்தில் 39 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி வெல்லும் - மோடி முன்பு அண்ணாமலை உத்தரவாதம்!

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

39 தொகுதிகளிலும் வெல்வோம்:

அப்போது அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும். தமிழகத்தில் ஒரு அரசியல் சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி கிடக்கின்றது. 400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல அடுத்த 60 நாட்கள் நாம் பாடுபட வேண்டும். பல்லடம் கூட்டம் தமிழக பாஜகவிற்கு சரித்திரம் வாய்ந்ததாக இருக்கும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற காரணமானவர் பிரதமர் மோடி”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தமிழகம் முழுவதும்  234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். தற்போது இந்த பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2024-ல் ஊழல் கட்சியின் ஆட்சிக்கு பூட்டு

அண்ணாமலையை அடுத்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: “ என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. என் மீது அவதூறு பரப்பி பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தை கொள்ளையடிக்கவே இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அதை தடுக்க வேண்டும். இண்டியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்றி விட்டால் தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது. இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் தேசத்தை இனிமேலும் சுரண்ட முடியாது. 

மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு இளைஞரும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். 2024-ல் ஊழல் கட்சியின் ஆட்சிக்கு பூட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். காங்கிரஸ்- திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக முன்னுரிமை கொடுத்து வருகிறது. மத்தியில் திமுக 10 ஆண்டுகள் அங்கம் வகித்த போதும் தமிநாட்டிற்கு எதுவும் செய்யவில்லை”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

மேலும் படிக்க 

PM Modi Speech: தேசியத்தின் பக்கம் நிற்கும் தமிழகம்: பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

Thalapathy Vijay: நேரில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோகிணி திரையரங்க ஓனர் மகன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget