இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
நாடு முழுவதும் இன்று ரயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் புதிய நேர அட்டவணையை தற்போது பார்க்கலாம்.

ரயில்களின் புறப்படும், வருகை நேரம் மாற்றம்
நவீன காலத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகரித்து கொண்டே வந்தாலும், மக்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குறைந்த கட்டணத்தில் பயணம் போன்ற காரணங்களால் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயில் பயணத்தையே விருப்புகிறார்கள். இதற்காகவே இந்திய ரயில்வே சார்பாக ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்களின் வேகம், புறப்படும் நேரம் மாற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல ரயில்கள் புறப்படும் மற்றும் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பெரிய அளவில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வெளியூர் பயணங்களின் போது புதிய நேர அட்டவணையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அந்த வகையில் நெல்லை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம்
- சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனி 10 நிமிடங்ள் தாதமாக இரவு 8.50 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு தென்காசிக்கு புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று முதல் 35 நிமிடங்கள் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1. மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 8.35 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் முன்னதாக 1.15 மணிக்கே புறப்பட்டுவிடும்.
- சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 20 நிமிடங்கள் தாமதமாக 10.40 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடங்கள் தாமதமாக 8 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் முன்கூட்டியே 7.15 மணிக்கு புறப்படும்.
- சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக 3.05 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூருக்கு வரும் ரயில்களின் நேரம்
- ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 6 மணிக்கு புறப்படும்.
- செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 5 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.50 மணிக்கும் புறப்படும்
- நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.50-க்கு புறப்படும்.
- சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
- தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 25 நிமிடங்கள் தாமதமாக 9.05 மணிக்கு புறப்படும்.





















