மேலும் அறிய

தமிழ்நாட்டிலும் நிர்பயா? தலைநகரின் பெருமைமிகு அண்ணா பல்கலை.யில் பாலியல் அவலம்- கொந்தளித்த ஈபிஎஸ்!

டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது- ஈபிஎஸ்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு, 2ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு உணவு அருந்திய பிறகு, தான் காதலிக்கும் 4ஆம் ஆண்டு மாணவன் உடன் மறைவான இடத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர், மாணவனை அடித்து விரட்டிவிட்டு தன்னை பாலியல் தாக்குதல் செய்ததாக அம்மாணவி புகாரளித்துள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை

மாணவியை தாக்கியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, பெண் காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுவதுடன், சைபர் கிரைம் உதவியுடன் நேற்றிரவு அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர். பல்கலை. வளாகத்தில் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்த காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தலைநகரின் பெருமையான அடையாளத்தில் அவலமா?

தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது.

டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த திராவிட மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.

பெண்கள் படிப்பு, பணியிடங்களில் பாதுகாப்பில்லை

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
தஞ்சாவூரை பசுமையால் அலங்கரித்த ஆர்ஆர் இன்ஃப்ரா! 8,500 மரக்கன்றுகள் நட்டு சாதனை
பிக் பாஸ் திவாகர் கைது.. மதுரை வீட்டில் சென்னை போலீஸ் அதிரடி - யூடியூப் விவகாரத்தில் சிக்கல்!
பிக் பாஸ் திவாகர் கைது.. மதுரை வீட்டில் சென்னை போலீஸ் அதிரடி - யூடியூப் விவகாரத்தில் சிக்கல்!
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?
ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Embed widget