மேலும் அறிய

O Pannerselvam: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க - தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் ஓ.பி.எஸ்

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சூதாட்டம் ஒரு நோய் என்பதும், அடிமைத்தனம் என்பதும், பொறுப்புணர்வை இழக்கச் செய்யும் திறன் கொண்டது என்பதும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும், குடும்பத்தை நடுத் தெருவிற்கு அழைத்து வந்துவிடும் என்பதும், பணிச் சீர்குலைவை உண்டாக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்தார்கள்.

லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டாலும், ஆன்லைன் மூலம் பல்வேறு விளையாட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். சில தற்கொலை நிகழ்வுகளும் நடந்தேறின. இதனையடுத்து, ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடுக்கும் வகையில், முதலில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு 04-02-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 05-02-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. மேற்படி அவசரச் சட்டத்தை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தது.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மேற்படி சட்டம் ஒரு தொழிலையோ அல்லது பணியையோ அல்லது வியாபாரத்தையோ மேற்கொள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்து ஆன்லைன் விளையாட்டினை தடை செய்ய வழிவகுக்கும் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்து 02-08-2021 அன்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில், சட்டத்திற்கு உட்பட்ட தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தாவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இது குறித்து உரிய சட்டத்தை அரசு கொண்டு வந்ததாகவோ அல்லது சென்னை உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாகவோ தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஃபேன்டசி, ரம்மி, லூடோ, போக்கர், கால் பிரேக், கேரம் என பல ஆன்லைன் விளையாட்டுகள் குறித்தும், 2000 கோடி ரூபாய் வரையில் ஜெயிக்கலாம் என்றும் பிரபல நாளிதழ்களில் முதல் பக்கத்தில் விளம்பரங்கள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த விளம்பரத்திலேயே, இந்த விளையாட்டில் நிதி அபாயங்கள் உள்ளன என்றும், இது ஒரு கட்டாய பழக்கமாக மாறலாம் என்றும், தயவு செய்து பொறுப்புடனும், கய கட்டுப்பாட்டுடனும் விளையாடவும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இது சூதாட்டம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாகத் மேற்படி சட்டம் கொண்டு வரப்பட்டு, இந்த விளையாட்டு சில மாதங்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருந்தது. தற்போது மேற்படி சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து, அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இந்த நிலைமை தொடர்ந்தால், இளைஞர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பினைத் தேடுவதிலும் நாட்டம் செலுத்துவதை தவிர்ந்து, இதுபோன்ற அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். இது போன்ற விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ஃபேன்டஸி, லூடோ, போக்கர், ரம்மி, கால்பிரேக் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget