Edappadi Palanisamy: முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: குற்றச்சாட்டுகளை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி..!
தமிழ்நாட்டில் கள்ளசாரயத்தால் உயிரிழப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டில் கள்ளசாரயத்தால் உயிரிழப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும் ஊடகத்தின் வாயிலாக ஒரு அதிர்ச்சியான சம்பவம் வந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பாதித்துள்ளனர். இந்த 60 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கிட்டதட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் பல பேருக்கு கண் பார்வை இழந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இது மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னும் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூர் அருகே போலி மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்திகள் அனைத்தும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது. பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஆளுகின்ற காரணத்தினாலே இப்படிப்பட்ட கொடுமைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இன்றைய நிலைமையில் கள்ளசாராயம் அதிகரித்து வருகின்றது என்று சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின்போது சொல்லியிருந்தேன். இதையெல்லாம் அரசாங்கம் சரியான முறையிம் கவனம் எடுத்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
பல செய்தி நிறுவனங்களில் கள்ளசாராயம் மீண்டும் தலைதூக்கிறது என செய்திகள் வெளியிட்டன. அப்போதாவது இந்த இந்த அரசு விழித்துகொண்டு துரிதமாக செயல்பட்டு இருந்தால் தடுத்திருக்கலாம். இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். எனவே தமிழகத்தில் திறமையற்ற முதலமைச்சர் இருக்கிறார் அதேபோன்று காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது கள்ளச்சாராயம் பாலியல் வன்கொடுமை தீவிரவாதம் கொலை கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்து உள்ளது. உடனடியாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.