OPS on DMK Govt: கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்வு - ஓபிஎஸ் கட்டணம்
இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் தேர்வு கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை
"முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் இரண்டு மடங்கு, மும்மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
கொரோனா தொற்று நோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், வங்கிகள் மூலமாகவும், தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவும், நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்தக் கட்டண உயர்வு குறித்து மாணவ, மாணவியர் போராட்டங்களை நடத்தியும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. பழைய கட்டணத்தையே தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வசூலிக்கவும், இதர பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நிலவுகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
30 வயதிற்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக,
— O Panneerselvam (@OfficeOfOPS) April 10, 2022
வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது கண்டனத்திற்குரியது. pic.twitter.com/64x65l9Jqq
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்