AIADMK Nomination: நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு..
மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![AIADMK Nomination: நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு.. aiadmk candidate petition will be distributed from 21 february to march 1st 2024 for upcoming lok sabha election AIADMK Nomination: நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/19/05591aba998ffb3ea9d479db7c3383791708318428613589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பில் 40 தொகுதிகலுக்கான விருப்ப மனு வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 15,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொது தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 20,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், “ நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 – 1.3.2024 வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியுடைய அறிவிப்பிற்கிணங்க, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)