மேலும் அறிய

Gayathri Raghuram: அண்ணாமலைக்கு எதிராக அதே நாளில் யாத்திரை! தேதியை மாற்றி அறிவித்த காயத்ரி..! காரணம் என்ன?

தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கும் என நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் என நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஜனவரி 27ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரை" ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால்

எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு Z பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும், ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.” என பதிவிட்டு இருந்தார். 

முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணைமலை தலைமையில் கடலூரில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய அண்ணாமலை, ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் தமிழ்நாடு முழுவதற்குமான தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். ராகுல் காந்தி நாடு முழுவதற்குமான ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்ணாமலை தமிழகம் முழுவதற்குமான தனது நடைபயணத்தை அறிவித்தார்.

9 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

இதனிடையே, பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன்படி, முதலாவதாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்ற பாரத பிரதமருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக  அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்:

ராமர் பாலம் பாதிக்கப்படாமல்  சேது கால்வாய் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் எனவும்,  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி தமிழ்சங்கம் தந்து தேசத்தை பாதுகாத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு எனவும்,  தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே  பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும்  திமுக தலைமையிலான அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசை கண்டித்து தீர்மானம்:

கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும்,  பூத் கமிட்டியை வலுப்படுத்தவும்,  தமிழக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக கண்டித்தும், தமிழகம் தொழில் வளர்ச்சி 8ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட நட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என பகிரங்கமாக முன்னாள் பாஜக உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget